பெண்ணின் படத்தை முகநூலில் பதிவிட்டவர் கைது


பெண்ணின் படத்தை முகநூலில் பதிவிட்டவர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2021 12:46 AM IST (Updated: 15 Aug 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் படத்தை முகநூலில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள ஆரைக்குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது புகைப்படத்தை அடையாளம் தெரியாத நபர், தனது அனுமதியின்றி முகநூலில் பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டவர் திண்டுக்கல் மாவட்டம் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த சிவ பாலாஜி (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் நேற்று சிவபாலாஜியை கைது செய்தனர்.

Next Story