150 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சாத்தூர் அருகே 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சாத்தூர்,
தமிழக அரசு தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக சாத்தூர் நகர் பகுதியில் சாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் உப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ குழுவினர் சாத்தூர் நகர் பகுதியில் உள்ள 23, 24,19, 20 ஆகிய வார்டு பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி தடுப்பூசி செலுத்தினர். சாத்தூர் நகர் பகுதியில் ஒரே நாளில் 7 வார்டுகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அவர்களின் இல்லங்கள் தேடிச்சென்று தடுப்பூசி போடப்பட்டது. அப்போது சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், சாத்தூர் நகர தி.மு.க. செயலாளர் குருசாமி, வார்டு செயலாளர் கண்ணன், வார்டு பிரதிநிதி பாண்டியன், முனீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story