போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் குடகிற்கு சுற்றுலா வந்த கேரள தம்பதி
போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் குடகிற்கு சுற்றுலா வந்த கேரள தம்பதியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடகு:
கேரள தம்பதி
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்ஜீஷ்வரா தாலுகா பல்லங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் சையது முகமது(வயது 30). தொழில் அதிபரான இவர், தனது மனைவி அஹிரத் ரஷ்மானுடன் குடகு மாவட்டத்திற்கு காரில் சுற்றுலா வந்தார். அவர்கள், காரில் குடகு மாவட்டம் சித்தாபுரா வழியாக எம்மோடுவில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
சித்தாபுராவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், தொழில் அதிபர் சையது காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். பின்னர் தம்பதியிடம், அதிகாரிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கேட்டனர். சையதும் சான்றிதழை கொடுத்தார். அதனை அதிகாரிகள், வாங்கி ஆய்வு செய்தனர்.
தீவிர விசாரணை
அதில் தம்பதியினர் கொடுத்த சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. அதாவது, குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வருவதற்காக போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்து கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக தம்பதியினர் மீது சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story