சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர சோதனை


சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 15 Aug 2021 2:10 AM IST (Updated: 15 Aug 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

பெரம்பலூர்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தின விழா நடைபெறும் இடமான மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போலீசார் தீவிர சோதனையிட்டனர். மேலும் அங்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், போலீஸ் மோப்ப நாய் மூலம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். வெடிமருந்து சேமிப்பு கிடங்கினை போலீசார் ஆய்வு செய்தனர். தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் சோதனையிட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் மூலம் பொதுமக்கள் அதிகமான கூடும் இடங்களிலும் சோதனையிடப்பட்டது.

Next Story