முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாவடையான் (வயது 65). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாவடையான் தனது வீட்டின் எதிரே உள்ள பகுதியில் முருங்கை மரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாவடையான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாவடையானின் மனைவி மலர்கொடி கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து மாவடையான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story