கொரோனாவுக்கு 130 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.
சேலம், ஆக.15-
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 120 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அதிகரித்து 130 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆத்தூர் பகுதிகளில் 11 பேரும், நகராட்சி பகுதிகளில் 11 பேரும், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 94 ஆயிரத்து 688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 94 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை 92 ஆயிரத்து 161 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 922 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தை சேர்ந்த 45 மற்றும் 55 வயதுடைய ஆண்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரிகளில் இறந்தனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,605 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story