கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
கூடலூர்,
இந்த நிலையில் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி, பேபி நகர் உள்ளிட்ட இடங்களில் குட்டியுடன் 8 காட்டுயானைகள் முகாமிட்டு வருகிறது. நேற்று காலை 11 மணிக்கு அந்த காட்டுயானைகள் ஊருக்குள் வந்து முகாமிட்டது.
அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது ஒரு காட்டுயானை வனத்துறையினரை விரட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பட்டாசு வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
Related Tags :
Next Story