சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஆன்லைன் முன்பதிவு வசதி அறிமுகம்
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக கவுண்ட்டா்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆன்லைன் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை சான்று அவசியம் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைக்கான மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையத்தில் கடந்த மாதம் வரை 10-க்கும் குறைவான சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது சுமாா் 15-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதனால் ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் கிடைத்து விடும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு
இதனால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் கவுண்ட்டா்களில் கூட்டம் அதிகரித்து நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதை தவிா்க்க பயணிகளின் வசதிக்காக புதிய முறையை சென்னை விமான நிலையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்காக வரும் பயணிகள் முன்னதாகவே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான கியூ.ஆர்.கோடு ஒன்றை சென்னை விமான நிலையம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் முன்பதிவு செய்துகொண்ட பயணிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுவிடும். அந்த நேரத்தில் பயணிகள் வந்து வரிசையில் நிற்காமல் உடனடியாக பரிசோதனையை முடித்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story