பொன்னேரி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


பொன்னேரி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 Aug 2021 1:35 PM IST (Updated: 15 Aug 2021 1:35 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 21). இவரும் இதே ஊரை சேர்ந்த ராஜேஷ் (20) என்பவரும் திருப்பாலைவனம் பகுதியில் உள்ள செஞ்சியம்மன் நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கோளுர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

சாவு

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த ராஜேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story