10 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
10 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை,
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தனியார் பங்களிப்புடன் ஏஎப்டி தொழிற்சாலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திர தின உரையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா இன்றுகோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசின் சார்பில் சுதந்திர தினவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய ரங்கசாமி, “
அரசு திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய அரசு இயந்திரம் வேகமாக செயல்படுவது அவசியமாகும். எனவே, அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை எனது அரசு துரிதப்படுத்தியுள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்” என்றார்.
Related Tags :
Next Story