தூத்துக்குடியில் சுதந்திரதினவிழா: கலெக்டர் செந்தில்ராஜ் தேசியக்கொடி ஏற்றினார்


தூத்துக்குடியில் சுதந்திரதினவிழா: கலெக்டர் செந்தில்ராஜ் தேசியக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2021 6:16 PM IST (Updated: 15 Aug 2021 6:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.
சுதந்திரதின விழா
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு காலை 9 மணிக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து புறாக்கள், வண்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 92 ஆயிரத்து 822 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாராட்டு
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 48 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும். வருவாய் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, செய்திமக்கள் தொடர்புத்துறை மற்றும் கொரோனா தடுப்பு ஆக்சிஜன் உற்பத்தி கண்காணிப்பு குழு, தேர்தல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 150 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கி பாராட்டினார். மேலும் தியாகிகளின் வாரிசுகளுக்கு அந்தந்த பகுதி தாசில்தார்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், கூடுதல கலெக்டருமான சரவணன், மாநகராட்சிஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ்ஜெய்நாராயணன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் பிச்சை, மாவட் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது).அமுதா, உதவி கலெக்டர் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story