நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Aug 2021 10:19 PM IST (Updated: 15 Aug 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம்:
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நேற்று 2-வது நாளாக  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்கள் ஆலோசனை கூட்டம்

நாகை மீன்பிடி துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள்  நேற்று முன்தினம முதல் வரும் 20-ந் தேதி(வெள்ளக்கிழமை) வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
2-வது நாளாக வேலை நிறுத்தம்

மேலும், 20-ந் தேதிக்குள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால்  2 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 7 ஆயிரம் பைபர் படகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Next Story