வ உ சி மைதானத்தில் கலெக்டர் சமீரன் தேசியகொடி ஏற்றினார்
கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் சமீரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். 340 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
கோவை
கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் சமீரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். 340 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
கலெக்டர் கொடி ஏற்றினார்
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப் பட்டது. கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வெள்ளை புறாக்களையும், வண்ண பலூன்களையும் அவர் பறக்க விட்டார்.
340 பேருக்கு பாராட்டு
காவல் துறையில் கொரோனா தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு சுகாசினி, கருமத்தம்பட்டி மற்றும் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டுகள் ஆனந்த ஆரோக்கியராஜ், தமிழ்மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 3 பேர், சப்-இன்ஸ்பெக்டர்கள் 6 பேர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர், தலைமை காவலர்கள் 6 பேர், முதல் நிலை காவலர்கள்-3 பேர், ஊர்க்காவல் படையினர் 2 பேர் உள்பட 50 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு டாக்டர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் உள்பட சிறப்பாக பணியாற்றிய 290 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக சுதந்திர தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. பொது மக்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் உரிய சமூக இடை வெளி மற்றும் முகக்கவசம் அணிந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டது.
விழாவில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், போலீஸ் கமிஷனர் தீபக் எம். தாமோர், டி.ஐ.ஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு செந்தாமரை, துணை கமிஷனர்கள் உமா, ஜெயசந்திரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன், உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
தூய்மை பணியாளருக்கு வாழ்த்து
முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சிறந்த சேவைக்கான விருதை பெற்ற கள்ளப்பாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர் ஆர்.ஜெகநாதனுக்கு கலெக்டர் சமீரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story