கரம்பக்காடு அரசு பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை என்று ஊராட்சி தலைவர் புகார்
தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை என்று ஊராட்சி தலைவர் புகார் செய்யப்பட்டது.
கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஜியாவுதீன். இவர், நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு, அதே ஊராட்சியை சேர்ந்த கரம்பக்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் சண்முகநாதன் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவரான என்னை அரசு பள்ளியில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்துவிட்டதாக கூறி பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே செல்லாமல் நின்றுள்ளார். தகவல் அறிந்து கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதே போல கடந்த வருடமும் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்துவிட்டதால் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுக்க உள்ளதாக கூறினார்.
Related Tags :
Next Story