வாலிபர் மர்ம சாவு


வாலிபர் மர்ம சாவு
x
தினத்தந்தி 16 Aug 2021 1:22 AM IST (Updated: 16 Aug 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சிவகாசி, 
சிவகாசி நாரணாபுரம் ரோட்டில் உள்ள போஸ்காலனியை சேர்ந்தவர் வடக்கத்தியான் மகன் தங்கஈஸ்வரன் (வயது 27). இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த தங்கஈஸ்வரன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் எலி மருந்து குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதே பகுதியில் ஒரு இடத்தில் மயங்கி விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தொடாந்து உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், தங்கஈஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளார். இது குறித்து வடக்கத்தியான் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story