விபத்தில் தம்பதி-மகன் காயம்
விபத்தில் தம்பதி மற்றும் அவர்களுடைய மகன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
பாடாலூர்:
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா நம்புகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 32). இவருடைய மனைவி ராசாத்தி (27), மகன் ருபனேஷ்(7). இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள இரூர் கிராமத்திற்கு வந்துவிட்டு, பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவிளக்குறிச்சி பிரிவு சாலை எதிரில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆலத்தூர் தாசில்தார் அருளானந்தம், 3 பேர் காயமடைந்து கிடப்பதை கண்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தாசில்தார், காயமடைந்த 3 பேரையும் மீட்டு தான் வந்த அரசு வாகனத்தில் ஏற்றி பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பாராட்டினர்.
Related Tags :
Next Story