காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்
தேவாலா அட்டியில் காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால், அதை தடுக்கக்கோரி போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்.
கூடலூர்
தேவாலா அட்டியில் காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால், அதை தடுக்கக்கோரி போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்.
2 காட்டுயானைகள்
கூடலூர் தாலுகாவில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக கூடலூர் அருகே தேவாலா அட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக 2 காட்டுயானைகள் புகுந்து வருகிறது. மேலும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு வீடுகளை முற்றுகையிடுவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இதற்கிடையில் கடந்த வாரம் அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் இரும்பு ஷட்டரை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் அங்கு வைத்திருந்த உணவு பொருட்களை தின்று விட்டு சென்றது.
அட்டகாசம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த காட்டுயானைகள் மீண்டும் அப்பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து நள்ளிரவில் பாக்கியநாதன் என்பவரது மளிகை கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து அட்டகாசம் செய்தன. அப்போது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர்.
தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்த...
இதனிடையே காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர். அவர்களிடம் தேவாலா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Related Tags :
Next Story