பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பலி
பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் பலி
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக சேரம்பாடி நோக்கி நேற்று மாலையில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த காரை சோலாடி பழையபாடியை சேர்ந்த சங்கர் ஓட்டி சென்றார். அதில் அவரது உறவினர்கள் சுசீலா, தேவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர்.
தேவாலா அருகே கைதக்கொல்லி என்ற இடத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. தொடர்ந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுசீலா பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தேவாலா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், 4 பேரையும் மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story