15 ரவுடிகள் கைது
நெல்லை மாவட்டத்தில் 15 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
சுதந்திர தின விழாவையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் விடிய விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசாரின் இந்த சோதனையில் 300-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்ததாக 65 வழக்குகளும், லாட்டரி சீட்டுகள் விற்றதாக 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story