தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
கூடலூர்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வளர்ப்பு யானைகள் மற்றும் வனத்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் நேற்று காலை 9 மணிக்கு தெப்பக்காடு முகாமில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பத்மா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது வளர்ப்பு யானைகள் துதிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது. தொடர்து வனத்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் பார்வையிட்டார். விழாவில் வனச்சரகர்கள் தயானந்தன், மனோஜ், சிவக்குமார், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்பட வனத்துறையினர் கலந்துகொண்டனர்.
பின்னர் வனத்துறையினர் மற்றும் ஆதிவாசி மக்களின் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் சுதந்திர தின விழா உள்ளிட்ட முக்கிய விழாக்களை முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story