கர்நாடகத்தில் 750 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.150 கோடியில் தரம் உயர்த்தப்படும்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் 750 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.150 கோடியில் தரம் உயர்த்தப்படும் என்று சுதந்திர தின விழாவில் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:-
அங்கன்வாடி கட்டிடங்கள்
விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு விற்பனை செய்ய 750 விவசாயிகள் உற்பத்தி குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுக்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதி உதவி 3 ஆண்டுகளுக்கு ரூ.225 கோடி நிதி உதவி வழங்கப்படும். 75 நகரங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்
படும். இந்த நிதியை நகரங்களின் தூய்மை பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
750 பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள், செய்முறைக்கு தேவையான கட்டிடங்கள், நூலகம், கழிவறை போன்ற பணிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்படும். 750 அங்கன்வாடி கட்டிடங்களை தரம் உயர்த்த தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.7½ கோடி நிதி வழங்கப்படும். அம்ரித் மகோத்சவாவையொட்டி பெங்களூருவில் 75 குடிசை பகுதிகள் மேம்படுத்தபபடும்.
தொழிற்பயிற்சி
75 ஏரி-பூங்காக்கள் தரம் உயர்த்தப்படும். நகரில் வாகன நெரிசல் அதிகம் உள்ள 12 சாலைகள் மேம்படுத்தப்படும். மேம்பாலங்கள், சர்க்கிள் சாலைகளும்
மேம்படுத்தப்படும். 7,500 சுயஉதவி குழுக்களுக்கு சிறுதொழில் செய்ய தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 750 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.150 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின சமுதாயங்களை சேர்ந்த 75 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு 2 ஆண்டுகள் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். இதற்கு ரூ.112 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 75 ஸ்டார்ட்அப் (புதிய தொழில்கள்) நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்படும். அம்ரித் விளையாட்டு தத்து திட்டத்தின் கீழ் அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்க 75 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story