மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியையொட்டி கோடம்பாக்கம் முதல் போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியையொட்டி கோடம்பாக்கம் முதல் போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை முறையில் அமல்.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டப்பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் சந்திப்பு முதல் போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை முறையில் இந்த போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.
ஆற்காடு சாலை, 80 அடி சாலை சந்திப்பில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. போரூர் மார்க்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல ஆற்காடு சாலையில் போகலாம். மேலும் ஆற்காடு சாலையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவல் போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரு முறை சோதனை அடிப்படையில் இங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story