சுதந்திர தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம்
சுதந்திர தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம் முன்கள பணியாளர்களின் சேவையை கவுரவித்து வடிவமைப்பு.
மாமல்லபுரம்,
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை போல, இந்திய நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனாதொற்றில் அர்ப்பணிப்பு உணர்வோடு் டாக்டர்கள், போலீசார், நர்சுகள், துப்புரவு பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போன்ற முன்கள பணியாளர்கள் சிறப்பான சேவையாற்றி வருகின்றனர். அவர்களது சேவையை கவுரவிக்கும் விதமாக 75-வது சுதந்திர தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் தனியார் யோகா மையத்தில் உள்ள யோகாசன கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள் ஆகியோர் யோகாசன பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில் ஒருங்கிணைந்து 5 அடி உயரத்தில் மணல் சிற்பம் வடிவமைத்தனர். யோகா கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள் முன்கள பணியாளர்களை பாராட்டி, புகழாரம் சூட்டி சுதந்திர தின உறுதிமொழி ஏற்றனர். பொதுமக்கள் பலர் இந்த மணல் சிற்பத்தை கண்டுகளித்தனர்.
மாமல்லபுரம் கடற்கரையில் பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் போலீஸ்துறை மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு, அதிகமானோர் சேராத வகையில் குறைவான எண்ணிக்கையில் கலைஞர்கள் பங்கேற்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரையில் இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 நாட்கள் இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Related Tags :
Next Story