கும்மிடிப்பூண்டியில் பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டியில் பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது 59). இவர் பெரியார் நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 6-ம் தேதி செல்வராஜின் மனைவி தேவிகா (55) என்பவர் கோட்டக்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக அப்பகுதியில் நடந்து வந்தார்.
அப்போது அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, அவரது கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி விட்டார்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டக்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் கிடைத்த முக்கிய தடயங்களின் உதவியோடு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்டதாக ஆரம்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் நரேந்திரன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்கச்சங்கிலியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story