90 மதுபாட்டில்கள் பறிமுதல்
பெரணமல்லூர் அருகே 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் அருகே 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி, சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சோழவரம் கிராமத்தை சேர்ந்த வேலு (வயது 36), திருமணி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (32), வெங்கடேசன் (58) ஆகியோர் மறைவான இடத்தில் மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்தப்பகுதிக்கு செனஅறு பார்த்தபோது அங்குள்ள முட்புதரில் 90 மதுபாட்டில்கள் இருந்தது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story