அனுமதியின்றி அமைக்கப்படும் கூடாரங்கள்
கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்படும் கூடாரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் பல தனியார்கள் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் கூடாரங்கள் அமைத்துள்ளனர். அந்த கூடாரங்களில் வாடகைக்கு சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கின்றனர்.
அடிப்படை வசதியின்றி உள்ள இந்த கூடாரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மலைப்பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, கூக்கால், மன்னவனூர் போன்ற பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே வட்டக்கானல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 4 கூடாரங்களை ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் அகற்றினர்.
அதேபோல மேல்மலை பகுதியில் உள்ள கூடாரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story