சீர்காழி அருகே இயற்கை தானியங்களை கொண்டு தேசியக் கொடி வரைந்து வாலிபர் சாதனை
சீர்காழி அருகே இயற்கை தானியங்களை கொண்டு தேசியக்கொடி வரைந்து வாலிபர் சாதனை படைத்துள்ளார்.
சீர்காழி,
சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கீர்த்திவாசன். இவர் ரத்ததான சேவை மையத்தை நடத்தி வருகிறார். இவர் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, இயற்கை தானியங்களை பயன்படுத்தி இந்திய தேசியக்கொடியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் 24,418 ஆரஞ்சு மற்றும் வெள்ளை சோள விதைகள் மற்றும் பச்சை பயறு ஆகியவற்றை பயன்படுத்தி 73.1 சென்டி மீட்டர் உயரத்திலும் 33.5 சென்டி மீட்டர் அகலத்திலும் இந்திய தேசியக் கொடியை உருவாக்கி உள்ளார். இந்த கொடியை உருவாக்க 3 மணி நேரம் 23 நிமிடங்கள் 21 நொடிகள் ஆனது என்றார்.
இந்த முயற்சியை உலக சாதனைகளை பதிவு செய்யும் ஜாக்கி புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு புதிய உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இயற்கை தானியங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் தேசியக் கொடி இதுவாகும். உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதை சீர்காழி தாசில்தார் சண்முகம், வாலிபர் கீர்த்திவாசனிடம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
Related Tags :
Next Story