குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை


குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை
x
தினத்தந்தி 16 Aug 2021 7:57 PM IST (Updated: 16 Aug 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து உலா வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

கொடைக்கானல்: 

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சுவீடு, பாரதி அண்ணாநகர், கணேசபுரம், பி.எல்.செட் ஆகிய கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பேத்துப்பாறை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த மக்கள் பீதியில் அலறியடித்து வீட்டுக்குள் ஓடினர். தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரம் உலா வந்த அந்த காட்டு யானை பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. பகல், இரவு நேரங்களில் கிராம பகுதியில் உலா வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Next Story