கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2021 8:10 PM IST (Updated: 16 Aug 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்: 

வடமதுரை ரெயில் நிலைய சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு அனைத்து பணியாளர்கள் சங்க வடமதுரை ஒன்றிய தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தின்போது பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் குழு கடன்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை அளிக்க அரசு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் வடமதுரை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் விஜயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

இதேபோல் வேடசந்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்டார தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் முகமது சர்புதீன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 சாணார்பட்டி கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு சாணார்பட்டி ஒன்றிய தலைவர் மைக்கேல் தலைமையில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செயலாளர் தண்டபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் 9 கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நத்தம் நகர கூட்டுறவு வங்கி முன்பு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க மாவட்ட இணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், நத்தம் ஒன்றிய தலைவர் லியாகத் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர். 


Next Story