கோவில் ஊழியர் தற்கொலை


கோவில் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Aug 2021 8:27 PM IST (Updated: 16 Aug 2021 8:27 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் கோவிலில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் ஒருவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பழனி: 

பழனி ராமநாதன்நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவர் பழனி முருகன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் செல்வத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட செல்வம் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story