குழந்தைகளுக்காக 1699 படுக்கைகள் தயார்


குழந்தைகளுக்காக 1699 படுக்கைகள் தயார்
x
குழந்தைகளுக்காக 1699 படுக்கைகள் தயார்
தினத்தந்தி 16 Aug 2021 8:27 PM IST (Updated: 16 Aug 2021 8:27 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்காக 1699 படுக்கைகள் தயார்

கோவை

கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் 7 ஆயிரத்து 183, ஆக்ஸிஜன் படுக்கைகள் 4 ஆயிரத்து 526, தீவிர சிகிச்சை படுக்கைகள் 646 என மொத்தம் 12 ஆயிரத்து 355 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு வரும் பட்சத்தில் அவர்களுக்கு என பிரத்யேகமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் 573, ஆக்ஸிஜன் படுக்கைகள் 959, தீவிர சிகிச்சை படுக்கைகள் 167 என மொத்தம் 1699 படுக்கைகள் சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
அரசின் சார்பாக மொத்தம் 14 சிறப்பு கொரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவமனைகளில்உள்ள படுக்கைகள் விவரம், தமிழக முதல் - அமைச்சரின் காப்பீடு தொடர்பான விவரம், தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் போன்ற பொதுமக்களின் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்க மாவட்ட சிறப்பு கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொது மக்களை 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் உள்ள 14 சோதனை சாவடிகள், கோவை சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய ரெயில் நிலையங்களில் சுழற்சி முறையில் வருவாய் துறை, மருத்துவ துறை, காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் பொது மக்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ளும் நேரத்திற்கு முன் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சோதனை சான்று அல்லது 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். மேலும் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும்
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story