ரியல் எஸ்டேட் ஊழியருக்கு கத்திக்குத்து


ரியல் எஸ்டேட் ஊழியருக்கு கத்திக்குத்து
x
ரியல் எஸ்டேட் ஊழியருக்கு கத்திக்குத்து
தினத்தந்தி 16 Aug 2021 8:45 PM IST (Updated: 16 Aug 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் ஊழியருக்கு கத்திக்குத்து

கோவை

கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (வயது 42). இவர் ஒரு தனியார் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரி மற்றும் அவரது கணவர் பிரான்சிஸ் சேவியர் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. 

இந்த நிலையில் கிருஷ்ணபிரசாத் சகோதரி விவகாரத்து கோரி கோர்ட்டில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கு கிருஷ்ணபிரசாத் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிரான்சிஸ் சேவியர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணபிரசாத் ஆர்.எஸ்.புரம் டி.பி.சாமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரான்சிஸ் சேவியர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அப்போது ஆத்திரமடைந்த அவர் தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணபிரசாத்தை குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபிரசாத்தை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story