டாஸ்மாக் மேலாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் மேலாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2021 8:47 PM IST (Updated: 16 Aug 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வருகிற 24-ந்தேதி டாஸ்மாக் மேலாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று சங்க சிறப்பு தலைவர் கூறினார்.

திண்டுக்கல்: 

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். 

மாநில பொதுச்செயலாளர் கோதண்டம் முன்னிலை வகித்தார். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றி பேசுகையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரின் உத்தரவுகளை மீறி செயல்படும் திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றும் டாஸ்மாக் மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மேற்கண்ட மாவட்ட மேலாளர்களை கண்டித்து மதுரையில் வருகிற 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

 கூட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுபவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். புதுக்கோட்டையில் அனுமதியின்றி மதுவிற்றதாக 12 டாஸ்மாக் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டிப்பது, அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் கண்ணையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story