கடைமடை பகுதிக்கு பி.ஏ.பி.தண்ணீர் வந்ததால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடைமடை பகுதிக்கு பி.ஏ.பி.தண்ணீர் வந்ததால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில், உடைக்கப்பட்டிருந்த மடை சீரமைக்கப்பட்டதைத்தொடர்ந்து கடைமடை பகுதிக்கு பி.ஏ.பி.தண்ணீர் வந்ததால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பி.ஏ.பி.தண்ணீர்
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி.4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பி.ஏ.பி.உடுமலை கால்வாயிலும் சென்று கொண்டுள்ளது. இதில் ஆங்காங்கு உள்ள பகிர்மான கால்வாயின் மடைகள் திறக்கப்பட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் உடுமலையை அடுத்துள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த என்.அருள்ஜோதி, டி.கவிதா உள்ளிட்ட சிலரது தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்க்க முடியாமல் போனது. இதற்கு காரணம் கடைமடைபகுதியில் உள்ள இவர்களது தோட்டத்திற்கு அருகில் இருப்பவர்கள், இந்த மடைக்கு அருகில் உள்ள வரப்பை உடைத்து தண்ணீரை, அவர்களது தோட்டத்திற்கு கொண்டு செல்வதுதான் என்று பி.ஏ.பி.பொதுப்பணித்துறை இளம்பொறியாளரிடம் அருள்ஜோதி புகார் செய்திருந்தார்.
இந்த நிலையில் தங்களது தோட்டத்திற்கு, மடையில் இருந்து தண்ணீர் எடுத்து பாய்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி என்.அருள்ஜோதி, டி.கவிதா உள்ளிட்ட 5 பெண்கள் கடந்த 14-ம்தேதிஉடுமலை சர்தார் வீதியில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வழங்கவேண்டும் என்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பி.ஏ.பி.அதிகாரிகள், அந்த இடத்தை ஆய்வு செய்து தண்ணீர் வர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத்தொடர்ந்து அந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
உடைப்பு சீரமைப்பு
இதைத்தொடர்ந்து பி.ஏ.பி.திருமூர்த்தி கோட்ட செயற் பொறியாளர் ஜே.கோபி, உடுமலை கால்வாய் இளம்பொறியாளர் ஜி.விஜயசேகர் ஆகியோர் வெள்ளியம்பாளையத்திற்கு சென்றனர். அங்கு சிலரால் உடைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட மடைபகுதிகளை பார்வையிட்டுஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாகசீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகளை தொடர்ந்து அந்த மடையில்கிளை கால்வாயில் நேற்று முன்தினம் முதல்தண்ணீர் கடைமடை வரை சென்று கொண்டுள்ளது. அதன் மூலம் 15 விவசாயிகளின் 51 ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்று வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மடை உடைப்பால்தண்ணீர் வருவது தடைபட்டிருந்த நிலையில், பி.ஏ.பி.அதிகாரிகளின் நடவடிக்கைகளால் தங்களது கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்ததால் அந்த பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story