அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக்கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டையை சட்டையில் அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
இதில் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், துணை தலைவர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட தலைவர் மேகநாதன் நன்றி கூறினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகை அரசு தலைமை மருத்துவமனை, நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story