கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி, ஆக.17-
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கயல்விழி (வயது 42). இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். திங்கட்கிழமை என்பதால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
இதற்கிடையே கயல்விழி, கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தின் அருகில் வந்தார். திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, கயல்விழி மீது தண்ணீர் ஊற்றினர்.
ஏலச்சீட்டு
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
நான் ஏலச்சீட்டு நடத்தி வந்தேன். இதில் 14 பேர் என்னிடம் சீட்டு எடுத்துவிட்டு பணம் கட்டாமல் ஏமாற்றி விட்டனர். இதனால் மீதமுள்ளவர்களுக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. அவர்கள் என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்கின்றனர். இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story