50 மணல் மூட்டைகள் பதுக்கல் 2 பேர் கைது
அரகண்டநல்லூரில் 50 மணல் மூட்டைகள் பதுக்கல் 2 பேர் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் தென்பெண்ணை ஆற்றின் கரை ஓரத்தில் மணலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று குறிப்பிட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்து மூட்டையாக கட்டி பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் 50 மூட்டைகள் இருந்தன. இது தொடர்பாக அரகண்டநல்லூரை சேர்ந்த சேர்ந்த ராமு(வயது 42), சாரதி(37) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் 50 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story