ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 16 Aug 2021 11:11 PM IST (Updated: 16 Aug 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் வார்டு வாரியாக நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் வார்டு வாரியாக நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு முகாம் 

பொள்ளாச்சி நகராட்சியில் வடுகபாளையம், காமாட்சி நகர் ஆகிய நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு நகராட்சி மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். 

இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட டி.கோட்டாம்பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் ஜோதி நகரில் உள்ள ருக்குமணியம்மமாள் மேல்நிலைப்பள்ளியில்  சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஆணையாளர் ஆய்வு 

முகாமை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். மேலும் அவர் வரிசையில் நிற்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம், கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

அப்போது நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

38,700 பேருக்கு தடுப்பூசி

பொள்ளாச்சி நகராட்சி பகுதியை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 7,8,9 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு டி.கோட்டாம்பட்டி நகராட்சி தொடக்க பள்ளியிலும், 32,34,35 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு ஜோதி நகர் ருக்குமணியம்மாள் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாம்களில் 3 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதேபோன்று மீண்டும் 6 வார்டுகளை தேர்வு செய்து சிறப்பு முகாம் நடத்தப்படும். 

வழக்கம் போல் வடுகபாளையம், காமாட்சி நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படும். இதுவரைக்கும் நகராட்சி மூலம் 38 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story