வாகன விபத்தில் போலீஸ் ஏட்டு பலி
வாகன விபத்தில் போலீஸ் ஏட்டு பலியானாா்.
விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் முருகன் (வயது 48). புதுச்சேரி தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று புதுச்சேரியில் இருந்து தனது சொந்த ஊரான வானூரை அடுத்த எறையானூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மொளசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சென்றபோது புதுச்சேரி- திண்டிவனம் நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்று பயணிகளை இறக்கிவிட்டு இடதுபக்கமாக வந்தபோது திடீரென அதன் டிரைவர் பிரேக் போட்டார். அந்த சமயத்தில் பின்னால் வந்த ஏட்டு முருகன், பஸ்சின் பின்புறம் மோதினார். இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் கிளியனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்த ஏட்டு முருகனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தனியார் பஸ் டிரைவரான திண்டிவனம் அடுத்த நொளம்பூரை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (51) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story