மணல் கடத்திய வாகனம் பறிமுதல்


மணல் கடத்திய வாகனம் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Aug 2021 11:32 PM IST (Updated: 16 Aug 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே மணல் கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்புவனம்,

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது பொட்டப்பாளையம், கரிசல்குளம், கழுவன்குளம் ஆகிய கிராமங்கள். இந்த பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை உத்தரவின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கழுவன்குளத்திலிருந்து தின்னானேரி செல்லும் சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் அருகே வந்த சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை போட முயன்றனர். போலீசாரை பார்த்தவுடன் டிரைவர் சரக்கு வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். வேனை சோதனை செய்ததில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேனை பறிமுதல் செய்து திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏட்டு மருதுபாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story