இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள இடையவலசை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதையடுத்து அந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி கடந்த காலங்களில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால் இடையவலசை கிராம மக்கள் கடந்த ஆண்டில் நடைெபற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இளையான்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் தாசில்தார் ஆனந்த், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகள் அகற்ற நிலஅளவீடு செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்பின்னர் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.