மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நேற்று வகுப்புகள் தொடங்கின. அடுக்கம்பாறை அரசு அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புக்கு அழைப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கல்லூரி டீன் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்றனர். கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் ரோஜாப்பூ, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். முதல் நாளான நேற்று வகுப்புகளுக்கு வந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளைநிற கோட், ஸ்டெதஸ்கோப், புத்தகங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
முதல் நாளான நேற்று மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. கொரோனா பரிசோதனை முடிவுகள் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து கல்லூரி டீன் செல்வி கூறுகையில் கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. பலர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story