விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நட்ட போது 2 பேர் மின்சாரம் தாக்கி சாவு


விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நட்ட போது 2 பேர் மின்சாரம் தாக்கி சாவு
x
தினத்தந்தி 17 Aug 2021 12:18 AM IST (Updated: 17 Aug 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நட்டபோது மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இளையான்குடி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நட்டபோது மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மின்சாரம் தாக்கியது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கீழாயூர் காலனியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்து வந்தனர். இதற்காக இளையான்குடி போலீஸ் நிலையம் அருகே கீழாயூர் விலக்கில் கட்சி கொடிக்கம்பத்தை சரிசெய்து நடும் பணியில் நேற்று இரவு 8 மணி அளவில் அக்கட்சியினர் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது இரும்பிலான கொடிக்கம்பம் அருகில் உள்ள மின்கம்பி மீது எதிர்பாராதவிதமாக பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் கொடி கம்பத்தை பிடித்து இருந்த 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள்மயமானது.

2 பேர் பலி

இந்த சம்பவத்தில் கீழாயூர் காலனியை சேர்ந்த ஞானமுத்து மகன் குழந்தை(வயது 40), கருப்பையா மகன் பிரபு(23) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த ஆறுமுகம்(45), அவையன்(49) ஆகியோர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியிலும், திருவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சங்கர்(36) இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கட்சி கொடிக்கம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story