மது-கஞ்சா விற்ற 5 பேர் கைது
மது-கஞ்சா விற்ற 5 பேர் கைது
முசிறி
முசிறி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜீவ்காந்தி, பிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது முசிறி பழைய பஸ் நிலையம், தா.பேட்டை ரவுண்டானா, சேந்தமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற ராஜேஷ்குமார்(வயது 33), முத்துவேல்(44), முத்துச்செல்வன்(31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மது விற்றதாக துவரங்குறிச்சியை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள கலிங்கபட்டியை சேர்ந்த சுப்ரமணி(39) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்தனர். இது குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்ரமணியை கைது செய்து, அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.500-ஐ பறிமுதல் செய்தனர். ராம்ஜிநகர் அருகே உள்ள அரவக்குறிச்சியில் கஞ்சா விற்பதாக ராம்ஜிநகர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று மில் காலனியை சேர்ந்த லட்சுமணனை(42) பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் விற்பனைக்காக ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story