இலவச வீட்டுமனை பட்டா
இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர்,
சிவகாசி பாரதிநகர் பகுதி பொதுமக்கள் சார்பாக கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சிவகாசி பாரதி நகர் பகுதியில் நாங்கள் 50 குடும்பத்தினர் கடந்த 35 வருடங்களாக வசித்து வருகிறோம். பட்டாசு தொழில் மட்டுமே செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. வாழ்வாதாரம் பாதித்த நிலையில் வாடகை வீட்டில் வாடகை கொடுப்பதற்கு இயலாத வகையில் தவிக்கும் நிலை உள்ளது. எனவே வறுமை கோட்டுக்கும் கீழேயுள்ள எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உத்தரவிடும்படி வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story