தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கப்பல் கயிறு


தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கப்பல் கயிறு
x
தினத்தந்தி 17 Aug 2021 1:20 AM IST (Updated: 17 Aug 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கப்பல் கயிறு

ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே உள்ளது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை. இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கும் கம்பிப்பாடுக்கும் இடைப்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் சுமார் 70 அடி நீளம் கொண்ட பெரிய பிளாஸ்டிக் கயிறு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து மீனவர்கள் மூலம் தெரிவித்த தகவலை தொடர்ந்து கடலோர போலீசார் தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த அந்த பிளாஸ்டிக் கயிறை பார்வையிட்டனர். கரை ஒதுங்கி கிடந்த இந்த கயிறானது பெரிய கப்பல்களில் துறைமுகத்தில் நங்கூரத்தை பயன்படுத்தி நிறுத்தவோ, நங்கூர கயிறை தூக்கி கடலில் இறக்கவோ அல்லது ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலைகட்டி இழுக்கவோ பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது. தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய கயிரானது தனுஷ்கோடி அருகே ஆழ்கடல் பகுதியில் வழியாக சென்ற ஏதேனும் பெரிய கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story