டெம்போ மோதி வங்கி பெண் ஊழியர் பலி


டெம்போ மோதி வங்கி பெண் ஊழியர் பலி
x
தினத்தந்தி 17 Aug 2021 2:10 AM IST (Updated: 17 Aug 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே டெம்போ மோதி தனியார் வங்கி பெண் ஊழியர் பரிதாபமாக பலியானார்.

ராஜாக்கமங்கலம், 
ராஜாக்கமங்கலம் அருகே டெம்போ மோதி தனியார் வங்கி பெண் ஊழியர் பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
வங்கி பெண் ஊழியர்
ராஜாக்கமங்கலம் அருகே கன்னக்குறிச்சி நடுவூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர், அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் சுனிதா (வயது 22). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் தினமும் ஸ்கூட்டரில் வேலைக்கு செல்வது வழக்கம்.
அதே போல் நேற்று காலை சுனிதா தனது ஸ்கூட்டரில் வேலைக்கு புறப்பட்டார். 
டெம்போ மோதல்
கன்னக்குறிச்சி கீழூர் பகுதியில் சென்றபோது ஆலங்கோட்டையை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் ஓட்டி வந்த டெம்போ, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய சுனிதா, டெம்போவுக்கு அடியில் விழுந்தார். அப்போது சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்து சுனிதா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். 
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுனிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story