தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான உருக்கிய நகையை மீட்டனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான உருக்கிய நகையை மீட்டனர்.
தொடர் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி, நாரைக்கிணறு மற்றும் கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து கொள்ளையனை பிடிப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (வயது 37) தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். அவர், பல்வேறு இடங்களில் திருடிய ரூ.5 லட்சம் மதிப்பிலான 22 பவுன் நகைகளை உருக்கி வைத்திருந்தார். அதனை போலீசார் மீட்டனர்.
பல்வேறு வழக்குகள்
கைதான பாலமுருகன், கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் ஏற்கனவே 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மேலும் கடந்த 11-8-2019 அன்று கடையம் கல்யாணிபுரத்தில் தனியாக வசித்த வயது முதிர்ந்த தம்பதி சண்முகவேல்- செந்தாமரை ஆகியோரை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர். பாலமுருகனை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.
Related Tags :
Next Story