சேலம் அம்மாபேட்டையில் சாலை, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு
சேலம் அம்மாபேட்டையில் சாலை, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம்
சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட வித்யா நகர், நாராயண நகர், அய்யாசாமி பூங்கா ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அம்மாபேட்டை பாரதி நகர், சேலத்து நாயக்கர் காடு, பட்ட நாயக்கர் தெரு, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், ஆணையாளர் கிறிஸ்துராஜ் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார்.
மேலும் அம்மாபேட்டை வ.உ.சி. நகர், காமராஜர் காலனி எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story