சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் வேப்பந்தட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேப்பந்தட்டை வேதநதி ஆறு அருகே 2 பேர் சாராயம் விற்றது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில், வேப்பந்தட்டையை சேர்ந்த சித்ரா (வயது 45), பிம்பலூரை சேர்ந்த சுரேஷ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். பின்னர் 2 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story